Kathiravn Network

7 வயது சிறுமி விமானம் ஓட்டி சாதனை!

பீஜிங்: சீனாவை சேர்ந்த, ஐந்து வயது சிறுவன், 35 நிமிடங்கள் விமானத்தை இயக்கி சாதனை புரிந்துள்ளான். சீனாவின், பீஜிங் நகரை சேர்ந்தவர், ஹீ லீசெங். இவர், விமானம் இயக்குவதிலும், பனிப் பிரதேசங்களில் பயணிப்பதில் மிகுந்த விருப்பமுடையவர்.


சிறந்த முறையில் விமானத்தை இயக்க கற்றுக் கொண்ட லீசெங், தன் மகனையும் தலைசிறந்த விமானி ஆக்க வேண்டும் என எண்ணினார். இதனால், தன் நான்கு வயது மகன், ஹீ எய்டை, பீஜிங்கில் உள்ள தனியார் விமான பைலட் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைத்தத்தார்.


மிகச் சிறிய வயதில், பயமின்றி, விமானப் பயிற்சி பெற்ற, ஹீ எய்டு, ஓராண்டு பயிற்சிக்குப் பின், தலை சிறந்த விமானியைப் போல், மிக தைரியமாக விமானத்தை தனியாக இயக்க தொடங்கினான். சிறுவனின் தைரியத்தையும், சாதனையையும் உலகறியச் செய்ய, விமான பயிற்சி நிறுவனமும், ஹீ லீசெங்கும் இணைந்து பார்வையாளர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். அதன்படி, கடந்த,31ம்தேதி, பீஜிங்கில் உள்ள, தேசிய குழந்தைகள் பூங்காவில், பொதுமக்கள் முன்னிலையில், ஹீ எய்டு தனியாக விமானத்தை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

பொதுமக்கள் முன்னிலையில், இலகு ரக விமானத்தில் ஏறி அமர்ந்த, ஹீ எய்டு, சர்வ சாதாரணமாக விமானத்தை இயக்கி வானில் பறந்தான். அனைவரும் இதை வியப்புடன் கண்டு களித்தனர். தொடர்ந்து, 35 நிமிடங்கள் வானில் பறந்த சிறுவன், பத்திரமாக தரையிறங்கினான். இதன் மூலம், மிகக் குறைந்த வயதில் விமானத்தை இயக்கிய பெருமையை, ஹீ எய்டு பெற்றுள்ளான்.


இதுபோல் சீனாவைச் சேர்ந்த 7 வயது சிறுமி விமானம் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.


10:01 Share:

Kathiravan.com


Kathiravan.com » சினிமா செய்திகள்

Kathiravan.com » சிறப்புச் செய்திகள்

Kathiravan.com » தொழிநுட்பச் செய்திகள்


Get this gadget at facebook popup like box

back to top