Kathiravn Network

படுக்கையறை வசதிகளை கொண்ட விமானம் !

பயணிகளின் நன்மை கருதி படுக்கையறை, மலசலக்கூடம், மாநாடு மண்டபம் போன்ற வசதிகள் அடங்கிய சொகுசு விமானங்கள் இரண்டை ஐக்கிய அரபு இராஜ்ஜியம் அறிமுகப்படுத்தியுள்ளது.







ஏயர்பஸ் ஏ-380 மற்றும் பொயிங் பி 787 ஆகிய விமானங்களே இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விமானங்களில் ஐந்து நட்சத்திர ஹோட்டலைப்போன்று  தனியாக பிரிக்கப்பட்ட மூன்று படுக்கையறைகள், குளியலறை மலசலக்கூட வசதிகள் என்பன காணப்படுகின்றன.

இவ்விமானத்தில் 32 அங்குல தொலைக்காட்சிகள் அலுமாரி என்பவையும் இணைக்கப்பட்டுள்ளன.


இது குறித்து  எடிகாட் எயர்லைன் விமான சேவையின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் ஹோர்கன் தெரிவிக்கையில்,
 

'இந்த விமானத்தை  ஆகாய மார்க்;கத்தில் பயணிக்கும் வாகனங்களின் தயாரிப்புக்களை அதிகரிக்கும் வகையிலும் விமான போக்குவரத்தின் வர்த்தக நிலையை மேம்படுத்தும் பொருட்டும், வர்த்தக நோக்கிற்காக பயணிக்கும் பயணிகளின் எதிர்பார்ப்பை பூரணப்படுத்துவதற்காகவுமே அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இந்த இரண்டு விமானங்களிலும் வணிக அரங்கம் மற்றும் வர்த்தக கூட்டம் செய்வதற்கான அறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஹெட் செட்டுடன் கூடிய வீடியோ கேமும் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல தொலை தொடர்பு சாதனங்கயும் உண்டு. அதற்காக wi-fi சேவையும் பொருத்தப்பட்டுள்ளது' என்றார்.

12:00 Share:

Kathiravan.com


Kathiravan.com » சினிமா செய்திகள்

Kathiravan.com » சிறப்புச் செய்திகள்

Kathiravan.com » தொழிநுட்பச் செய்திகள்


Get this gadget at facebook popup like box

back to top