Kathiravn Network

கையடக்க தொலைபேசிகளால் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு

கையடக்க தொலைபேசி மற்றும் ஏனைய கம்பியில்லா தொழில் நுட்பங்கள் சிறுவர்களின் மன ஆரோக்கியத்தை பாதிப்பது தொடர்பான பிரதான ஆய்வொன்று பிரித்தானிய விஞ்ஞானிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.




லண்டன் கல்லூரியின் தலைமையில் 11வயது மற்றும் 12 வயதுடைய 2500 பேரிடம் கடந்த செப்டெம்பர் மாதம் முதல் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்போது அந்த சிறுவர்களின் சிந்தனை ஆற்றல், ஞாபக சக்தி, கவனம் என்பன தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

சிறுவர்கள் தொடர்பில் இத்தகைய நவீன தொழில் சட்டங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வு மிகவும் முக்கியமான ஒன்றென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த தொழில்நுட்பங்களால் சிறுவர்களில் ஏற்படும் பாதிப்பு குறித்து மிகவும் குறைந்த அளவிலேயே அறிய முடிந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.



இந்நிலையில் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் அடுத்த கட்டமாக 2017ஆம் ஆண்டில் பரிசோதனைகளுக்கு உட்படவுள்ளனர். இந்த ஆய்வுக்காக ஒரு மில்லியன் ஸ்ரேலிங் பவுண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

10:20 Share:

Kathiravan.com


Kathiravan.com » சினிமா செய்திகள்

Kathiravan.com » சிறப்புச் செய்திகள்

Kathiravan.com » தொழிநுட்பச் செய்திகள்


Get this gadget at facebook popup like box

back to top